தேவா உந்தன் நாமம் பெரியது
எல்லா நாமத்திலும் உயர்ந்தது
உம்நாமம் பாடி போற்றுவேன்
ஏற்றுக் கொள்ளும் துதியை
1. இயேசு என்ற உந்தன் நாமமே
பாவியை விடுவிக்கும் அதே
பாவ சாப ரோகம் எல்லாமே
ஜெயித்திட வல்ல நாமமே
2. இம்மானுவேல் உந்தன் நாமமே
பரத்தினில் தந்த நாமமே
இணையில்லா இன்ப நாமமே
இயேசு என்ற திருநாமமே
3. இயேசு என்றால் பறந்ததிடுமே
இன்னல் துன்பம் துயரங்களே
வந்திடுவாய் அவரண்டையே
தந்திடுவார் சமாதானமே
HOME
More Songs